தொழில்நுட்பம்
ஒப்போ என்கோ

விரைவில் அறிமுகமாகும் ஒப்போ வயர்லெஸ் இயர்பட்ஸ்

Published On 2019-12-16 08:07 GMT   |   Update On 2019-12-16 08:07 GMT
ஒப்போ நிறுவனத்தின் புதிய என்கோ ஃப்ரீ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது.



ஒப்போ நிறுவனம் தனது என்கோ ஃப்ரீ இயர்பட்ஸ் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக ஒப்போ நிறுவனம் தனது ரெனோ 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் டிசம்பர் 26 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்து இருந்தது. 

புதிய ஸ்மார்ட்போன்களுடன் என்கோ ஃப்ரீ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தையும் டிசம்பர் 26 நிகழ்வில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஒப்போ தெரிவி்த்துள்ளது. புதிய தகவல்களின் படி இயர்பட்ஸ் நீண்ட ஸ்டெம் மற்றும் சார்ஜிங் கேஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.



இதன் வடிவமைப்புகளில் புதிய இயர்பட்ஸ் பார்க்க ரியல்மி பட்ஸ் ஏர் போன்றே காட்சியளிக்கிறது. ரியல்மி தனது பட்ஸ் ஏர் இயர்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஒப்போ இயர்பட்ஸ் வைட், பிளாக் மற்றும் பின்க் நிறங்களில் உருவாகி இருக்கிறது.

புதிய இயர்பட்ஸ் இல் ஒப்போ பிராண்டிங் கொண்டிருக்கும் நிலையில், இதன் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும், இதில் ப்ளூடூத் 5.0 ஆப்ஷன் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் ஒரு முறை க்ளிக் செய்தால் கூகுள் அசிஸ்டண்ட், மியூசிக், கால் கண்ட்ரோல் போன்ற வசதிகளை வழங்குகிறது.

இந்த இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமான என்கோ கியூ1 நெக்பேண்ட் ஹெட்செட்டில் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News