செய்திகள்
சிறப்பு ரெயில்

கொல்லத்தில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரெயில்

Published On 2020-10-24 04:05 GMT   |   Update On 2020-10-24 04:05 GMT
கொல்லத்தில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
மதுரை:

தென்னக ரெயில்வே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. அதனைதொடர்ந்து, கொல்லத்தில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து கொல்லத்துக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தினமும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் (வ.எண். 06101) சென்னையில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 1.20 மணிக்கு மதுரை ரெயில்நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தென்காசி ரெயில் நிலையத்துக்கும், காலை 8.45 மணிக்கு கொல்லம் ரெயில் நிலையத்துக்கும் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கொல்லத்தில் இருந்து வருகிற 26-ந் தேதி மதியம் 12 மணிக்கு சிறப்பு ரெயில் (வ.எண்.06102) புறப்படுகிறது. இந்த ரெயில் மாலை 3.15 மணிக்கு தென்காசி ரெயில் நிலையம் வந்தடைகிறது. மாலை 6.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

இந்த ரெயிலில், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறப்பு ரெயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, புனலூர், அவனீசுவரம், கொட்டாரக்கரை, குந்தரா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
Tags:    

Similar News