ஆட்டோமொபைல்
பஜாஜ் பல்சர் 180

பஜாஜ் பல்சர் 180 பிஎஸ்6 இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-02-20 08:18 GMT   |   Update On 2021-02-20 08:18 GMT
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 180 பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பிஎஸ்6 ரக பல்சர் 180 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1,04,768 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பிஎஸ்6 மாடல் தற்சமயம் பிளாக் ரெட் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.

ஸ்டைலிங்கை பொருத்தவரை ட்வின் டிஆர்எல், டின்ட் செய்யப்பட்ட வைசர் வழங்கப்படுகிறது. காக்பிட் பகுதியில் அதிநவீன, செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் என்ஜின் கவுல், ஸ்ப்லிட்-சீட், 2 பீஸ் கிராப் ரெயில் வழங்கப்பட்டு இருக்கிறது.



மெக்கானிக்கல் அம்சங்கள் மற்றும் இதர பாகங்கள் பல்சர் 180எப் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி இந்த நேக்கட் ரோட்ஸ்டர் மாடலில் 178.6சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 16.7 பிஹெச்பி பவர், 14.52 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

சஸ்பென்ஷனிற்கு முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ட்வின் ஸ்ப்ரிங் வழங்கப்பட்டு உள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 280எம்எம் ஒற்றை டிஸ்க், பின்புறம் 230 எம்எம் சிங்கில் ரோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.

புதிய பல்சர் 180 பிஎஸ்6 மாடல் ஹோண்டா ஹார்னெட் 2.0, டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர்180 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
Tags:    

Similar News