ஆன்மிகம்
காளியம்மன் கோவில்களில் தீமிதி விழா

எடப்பாடியில் 5 காளியம்மன் கோவில்களில் தீமிதி விழா

Published On 2021-03-05 07:15 GMT   |   Update On 2021-03-05 07:15 GMT
எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் 5 காளியம்மன் கோவில்களில் தீமிதி விழாவில் பெண்கள், குழந்தைகள் உள்பட பல ஆயிரக்கணக்கானோர் தீமிதித்தனர்.
எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் 5 காளியம்மன் கோவில்களில் தீமிதி விழா நடைபெற்றது. எடப்பாடி வெள்ளாண்டிவலசு ஓம் சக்தி காளியம்மன், பழையபேட்டை காளியம்மன், தாவாந்த தெரு காளியம்மன், கேட்டுக்கடை காளியம்மன், சின்னநாச்சியூர்காளியம்மன் கோவில்களில் மாசித்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு காளியம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதைத் தொடர்ந்து கோவில் முன்பு குண்டத்தில் தீ வளர்க்கப்பட்டது. பின்னர் ஊர் கவுண்டர்கள், கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் கரகம் ஆற்றுக்கு சென்று பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு ஊர்வலமாக வந்து தீமிதித்தனர். பெண்கள், குழந்தைகள் உள்பட பல ஆயிரக்கணக்கானோர் தீமிதித்தனர்.

மேலும் ஏராளமானோர் கடவாய் அழகு, தேங்காய் இளநீர் அழகு, எலுமிச்சை அலகு குத்தி தீ மிதித்தனர். மேலும் பக்தர்கள் பலர் பொங்கல் வைத்து, ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Tags:    

Similar News