செய்திகள்
மாயம்

வேப்பந்தட்டை அருகே கல்லூரி மாணவி மாயம்- புகாரை வாங்க மறுத்ததாக பெற்றோர் குற்றசாட்டு

Published On 2019-09-02 11:18 GMT   |   Update On 2019-09-02 11:18 GMT
வேப்பந்தட்டை அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் புகாரை வாங்க மறுத்ததால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள சின்னாறு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் நிவேதா (வயது 17).இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 31ந்தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடை ந்த விஜயகுமார் தனது மகளை பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இது குறித்து புகார் அளிக்க மங்கலமேடு போலீஸ் நிலையத்திற்கு சென்றார். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்து பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் தருமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் காவல்நிலையத்தில் நிவேதாவின் பெற்றோர்கள் புகார் தெரிவித்து ள்ளனர். ஆனால் அங்கும் புகாரை வாங்க மறுத்து மங்கலமேடு காவல் நிலையத்திற்கு செல்லுமாறுகூறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் இந்த காவல் நிலையம் செல்லுங்கள் அந்த காவல் நிலையம் செல்லுங்கள் என்று அழைப்பதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் தங்களது புகாரை ஏற்று வழக்குபதிந்து, போலீசார் நிவேதாவை கண்டு பிடித்துதர வலியுறுத்தி காவல் நிலையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பெரம்பலூர் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான நிவேதாவை தேடி வருகிறார்கள்.

விஜயகுமார் அளித்த புகார் மனுவில் சின்னாறு கிராமத்தை சேர்ந்த அருள் முருகன் என்பவர் தான் தனது மகளை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News