லைஃப்ஸ்டைல்
கூந்தல் அழகை பாதுகாப்பது எப்படி?

கூந்தல் அழகை பாதுகாப்பது எப்படி?

Published On 2019-07-23 05:19 GMT   |   Update On 2019-07-23 05:19 GMT
கூந்தலை உரிய பராமரிப்பு செய்து பாதுகாத்தாலே, கூந்தல் சார்ந்த பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லலாம். கூந்தல் அழகை எப்படிப் பாதுகாப்பது என்று அறிந்து கொள்ளலாம்.
விதவிதமாக ஹேர்ஸ்டைல் செய்துகொண்டு டிரெண்டில் அசத்தும் பெண்களுக்கு இளநரை, கூந்தல் வறட்சி, பொடுகுப் பிரச்னை போன்றவை தலையாய பிரச்சனையாக இருக்கிறது. இவற்றிலிருந்து எப்படி விடுபடுவது? கூந்தல் அழகை எப்படிப் பாதுகாப்பது என்று அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் கூந்தலின் தன்மை, கூந்தல் சார்ந்த பிரச்னைகள் வேறுபடும். கூந்தல் பிரச்னைகளைட் தடுக்க நாம் அன்றாடம் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் இருந்து ஷாம்பு வரை எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். கூந்தலை உரிய பராமரிப்பு செய்து பாதுகாத்தாலே, கூந்தல் சார்ந்த பிரச்னைகளுக்கு குட்பை சொல்லலாம்.

கூந்தல் நரைப்பதற்கும் நாம் பயன்படுத்தும் ஷாம்பிற்கும் சம்பந்தம் உண்டு. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பில் பாராஃபைன் அதிகமாக இருக்கும் பட்சத்தில், அது உங்கள் கூந்தலில் உள்ள மெலனின் அளவைக் குறைத்து, கூந்தலை நரைக்கச்செய்யும். எனவே, ரசாயனம் இல்லாத ஷாம்பைத் தேர்வுசெய்து பயன்படுத்துவது ஆரோக்கியமானது. தினமும் ஷாம்பு பயன்படுத்தி ஹேர் வாஷ் செய்யாமல், வாரம் 3 முறை மட்டும் ஷாம்பு உபயோகிக்கும்பட்சத்தில் நரை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

யூ கட் அல்லது வி கட், ஸ்ட்ரெய்ட் கட் செய்திருக்கிறீர்கள் எனில் பிரச்னையில்லை. கூந்தல் வளரத்தொடங்கும்போது ஒரே நீளத்தில்தான் வளரும். சில மாதங்கள் கழித்து மீண்டும் கட் செய்துகொள்ளலாம். ஃபெதர் கட், ஸ்டெப் கட் செய்கிறீர்கள் எனில், கூந்தல் வளரத்தொடங்கும்போது, ஒரு முடி நீளமாகவும் ஒரு முடி குட்டையாகவும் வளரும் என்பதால், 2 மாதத்திற்கு ஒரு முறை கூந்தலின் நுனிப்பகுதியை ட்ரிம் செய்துகொள்வது நல்லது.

காய்ந்த நெல்லிக்காய் மற்றும் வெந்தயத்தை சரிசமமாக எடுத்துப் பொடித்து, தயிர் கலந்து பேக்காக அப்ளை செய்து, ஒரு மணிநேரம் கழித்து கூந்தலை அலச, பொடுக்கு பை பை சொல்லலாம்.

கூந்தல் வறட்சியை போக்க தினமும் ஷாம்பு பயன்படுத்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும். pH மதிப்பு குறைந்த ஷாம்புகளைத் தேர்வுசெய்து பயன்படுத்த வேண்டும்.

அதிக வறட்சி உள்ளது எனில், தயிர் மற்றும் முல்தானிமெட்டியை சம அளவில் எடுத்து, ஒன்றாகக் கலந்து பேக் போட்டு கூந்தலை அலசவும். வாரம் ஒரு முறை இதனைச் செய்து வர கூந்தல் வறட்சி நீங்கும்.

பாதாம், காய்கறிகள், கீரைகள் எனப் புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News