உலகம்
ஏவுகணை சோதனை

இந்த மாதத்தில் மட்டும் 4 முறை ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா

Published On 2022-01-18 06:13 GMT   |   Update On 2022-01-18 06:13 GMT
ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டது.
சியோல்:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. 

இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் வட கொரியா தனது ராணுவத் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஏவுகணை சோதனையை தொடர்கிறது. ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்ததால் அமெரிக்கா கடும் ஆத்திரமடைந்தது. உடனடியாக, அந்த ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டது. 



இந்த புதிய பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில், ரெயிலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது வட கொரியா. அதன் தொடர்ச்சியாக நேற்று வழிகாட்டி ஏவுகணைகளை சோதனை செய்ததாக, வடகொரியா கூறி உள்ளது. 

இந்த மாதத்தில் மட்டும் 4 முறை வடகொரியா ஏவுகணைகளை சோதனை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News