செய்திகள்
சீத்தாராம் யெச்சூரி

நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது- இந்திய கம்யூனிஸ்டு தலைவர் வேதனை

Published On 2019-09-26 17:30 GMT   |   Update On 2019-09-26 17:30 GMT
நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

புதுச்சேரி:

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழகம், புதுவை மாநிலக்குழு கூட்டம் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது.

3-ம் நாள் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி பதவியேற்றதிலிருந்து நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து வருகிறது. ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகள் மூடப் பட்டுள்ளதால் 30 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். மக்களிடம் பணம் இல்லாததால் வாங்கும் சக்தியை இழந்து விட்டனர்.

இந்தியாவின் உள்கட்டமைப்பினை மேம்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. கிராமபுறங்கள் வளர்ச்சி அடையவில்லை. இந்தியாவில் ஏற்றுமதி குறைந்ததால், ஏற்றுமதி மூலம் கிடைக்கப்பட்ட வருமானம் குறைந்துள்ளது. இந்திய பொருளாதாரம் சீரழிந்து வருகிறது.

இதனால் பணம் உள்ளவர்கள்தான் வசதி படைத்தவர்களாக உள்ளனர். ஏழைகள் ஏழையாகவே இந்து வருகின்றனர். ஏழைகளின் வாழ்வில் வளர்ச்சி ஏற்படவில்லை. இந்திய பொருளாதாரம் சீரழிந்து வரும் நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவர மோடி முயற்சிக்கிறார். இதனால் யாருக்கு என்ன லாபம்?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News