செய்திகள்
சரத்பவார்

அரசியலில் முன்னணி தலைவர்களை வீழ்த்திய உறவுகள்...

Published On 2019-11-23 07:22 GMT   |   Update On 2019-11-23 10:16 GMT
இந்திய அரசியலில் நெருங்கிய உறவுகளால் மிகப்பெரிய அரசியல் சறுக்கல்களை சந்தித்தவர்கள் மறைந்த என்.டி.ராமராவும், தற்போது சரத்பவாரும்தான்.
மும்பை:

அரசியலில் பதவி, புகழுக்காக ரத்த சொந்தங்களே ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வது வாடிக்கையானதுதான்.

இந்திய அரசியலில் நெருங்கிய உறவுகளால் மிகப்பெரிய அரசியல் சறுக்கல்களை சந்தித்தவர்கள் மறைந்த என்.டி.ராமராவும், தற்போது சரத்பவாரும்தான்.

ஆந்திர அரசியலில் 1980களில் அசைக்க முடியாத தலைவராக வலம் வந்தவர் என்.டி.ராமராவ். தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடித்தார். 3 முறை முதல்-மந்திரியாகவும் இருந்தார்.

1984-ல் என்.டி.ராமராவ் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அப்போது பாஸ்கர்ராவ் சூழ்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றினார்.

என்.டி.ராமராவ் திரும்பியதும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். ஆனால் ஒரே மாதத்தில் சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் சூழ்ச்சியால் என்.டி.ராமராவ் ஆட்சியை பறிகொடுத்தார். சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரி ஆனார். அதன் பிறகு சந்திரபாபு நாயுடுவே தெலுங்கு தேசத்தை கைப்பற்றி ஆட்சியையும் கைப்பற்றினார்.

இப்போது மகாராஷ்டிராவிலும் சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தன் போக்கில் அரசியல் காய்களை நகர்த்தி சரத்பவாரை வீழ்த்தி இருக்கிறார். இனி தேசியவாத காங்கிரஸ் அஜித் பவார் கையிலா? சரத் பவார் கையிலா? என்பது போகப்போகத்தான் தெரியும்.
Tags:    

Similar News