செய்திகள்
கோப்புபடம்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 7 சிறுமிகளின் கர்ப்பத்தை கலைக்க கேரள ஐகோர்ட்டு அனுமதி

Published On 2021-01-22 08:27 GMT   |   Update On 2021-01-22 08:27 GMT
கொரோனா ஊரடங்கு காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 7 சிறுமிகளின் கர்ப்பத்தை கலைக்க கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரளாவில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருந்த போதிலும் சிறுமிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறுமிகள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

கடந்த 6 மாதத்தில் மட்டும் 7 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது. இதில் அவர்கள் கர்ப்பம் அடைந்து பாதிப்புக்கு ஆளானார்கள்.இதில் ஒரு சிறுமிக்கு 13 வயதும், இரண்டு சிறுமிகளுக்கு 14 மற்றும் 16 வயது ஆகும். பாதிக்கப்பட்ட சிறுமிகள் தாங்கள் கர்ப்பமாக இருப்பது கூட தெரியாத நிலையில் இருந்தனர்.

இவர்களின் எதிர் காலத்தை நினைத்து கவலைப்பட்ட பெற்றோர், சிறுமிகளின் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டில் மனு செய்தனர்.

மனுவை விசாரித்த ஐகோர்ட்டு 7 சிறுமிகளின் கர்ப்பத்தை கலைக்கவும், சட்டபூர்வமாக அனுமதி அளித்து உத்தரவிட்டது.

மேலும் சிறுமிகளுக்கு மருத்துவ துறையினர் உரிய மனநலஆலோசனை வழங்கவேண்டும் எனவும் கூறியது. இந்த சிறுமிகளுக்கு கேரள மருத்துவ கழகம் இலவச சட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

Tags:    

Similar News