செய்திகள்
கருப்பட்டி

குன்னத்தூரில் ரூ.20 லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்

Published On 2020-01-14 17:33 GMT   |   Update On 2020-01-14 17:33 GMT
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் ரூ.20 லட்சத்துக்கு தென்னங்கருப்பட்டி ஏலம் போனது. வரத்து இல்லாததால் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெற வில்லை.
குன்னத்தூர்:

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம்.

நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு உற்பத்தியாளர்கள் 4 ஆயிரம் கிலோ தென்னங் கருப்பட்டியை  கொண்டு வந்திருந்தார்கள்.  தென்னங்கருப்பட்டி கிலோ ரூ.155.10 பைசா வீதம் 6 லட்சத்து 20 ஆயிரத்து 400 க்கு ஏலம் போனது. வரத்து இல்லாததால் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெற வில்லை. 

இத் தகவலை கூட்டுறவு கருப்பட்டி சம்மேளன மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைவர் தெரிவித்தார்கள்.
Tags:    

Similar News