செய்திகள்
கோப்புப்படம்

'பெண்கள் விளையாட தடை - ஏன்னா...'- தலிபான் சொல்லும் சர்ச்சை காரணம்

Published On 2021-09-09 08:17 GMT   |   Update On 2021-09-09 08:17 GMT
தலிபான் அமைப்பின் பழமைவாதக் கொள்கைகளால் ஆப்கானிஸ்தானில் பல தரப்பு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் மக்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தலிபான்களுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்துள்ள தலிபான் அமைப்பு, பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது. அதற்கு அவர்கள் கூறியுள்ள காரணமும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இது குறித்து தலிபான் அமைப்பு கூறியுள்ளதாவது:-

விளையாட்டுகளில் பெண்கள் ஈடுபடுவது அவசியம் இல்லை. பெண்கள் விளையாட்டில் ஈடுபடுவதால் அவர்களின் முகம் மற்றும் உடல் முழுவதுமாக மூட முடியாத சூழல் ஏற்படும். இதை ஏற்க முடியாது.

இது ஊடகங்களின் காலம். பெண்கள் விளையாட்டில் ஈடுபட்டால் அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்படும். இதையும் ஏற்க முடியாது.

இவ்வாறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

தலிபான் அமைப்பின் பழமைவாதக் கொள்கைகளால் அந்நாட்டில் பல தரப்பு மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் மக்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தலிபான்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் பெண்களுக்கு விளையாட அனுமதி இல்லை என்று தலிபான் கூறியுள்ளது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.


Tags:    

Similar News