தொழில்நுட்பம்
சுந்தர் பிச்சை

சமூக வலைதள விதிமுறைகள் குறித்து கூகுள் சிஇஒ கூறுவது என்ன?

Published On 2021-05-27 11:11 GMT   |   Update On 2021-05-27 11:11 GMT
இந்தியாவில் அமலுக்கு வந்துள்ள புதிய சமூக வலைதள விதிமுறைகள் குறித்து கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி கருத்து தெரிவித்தார்.


சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் சா்ச்சைக்குரியதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டும் பதிவுகளை 36 மணி நேரங்களுக்குள் நீக்குவது உள்பட பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மத்திய அரசு அமலாக்கி இருக்கிறது. இதற்கு சில நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுகுறித்து கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியதாவது..,

கூகுள் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, அரசாங்கங்கள் உடன் இணைந்து பொறுப்பான முறையில் செயல்படுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அரசாங்கங்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப ஒழுங்குமுறை நடைமுறைகளை அமலாக்குகின்றன, என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.



"எங்களின் உள்ளூர் அதிகாரிகள் கூகுள் இயங்கி வரும் ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டின் உள்ளூர் விதிகளுக்கு உட்பட்டு அவற்றுக்கு மதிப்பு அளிப்போம். அரசு கோரிக்கைகளை ஏற்கும் விவகாரங்கள் குறித்து எங்களிடம் வெளிப்படையான அறிக்கைகள் உள்ளன. அவற்றை நாங்கள் சம்மந்தப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடுவோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.

"நிறுவனம் என்ற முறையில், சுதந்திரம் மற்றும் வெளிப்படையான இணைய சேவை மற்றும் அது வழங்கும் பலன்களுக்கு மதிப்பளிக்கிறோம். உலகம் முழுக்க ஒழுங்குமுறை ஆணையங்களுடன் இணைந்து பொறுப்பான முறையில் செயல்பட்டு வருகிறோம்," என அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News