ஆன்மிகம்
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பூச்சொரிதல்விழாவை முன்னிட்டு பெண்கள் பூத்தட்டுகள் கொண்டு வந்தபோது எடுத்த படம்

தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது

Published On 2021-03-22 05:15 GMT   |   Update On 2021-03-22 05:15 GMT
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. வருகிற 30-ந் தேதி திருத்தேர் தலைஅலங்காரம் நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் நகரில் அமைந்துள்ள மதுரைகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனிமாதம் பெருந் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு பங்குனி பெருந்தேர்திருவிழா கடந்த 17-ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மதுரைகாளி அம்மனுக்கு பூத்தட்டுகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

வருகிற 23-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து ஆயிரம் பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் வருகிற 30-ந் தேதி இரவு நடைபெறுகிறது. தொடர்ந்து வாணவேடிக்கை மற்றும் திருத்தேர் குடிபுகும் நிகழ்ச்சியும் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், கோவில் பூசாரிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News