தொழில்நுட்பம்

ஃபேஸ்புக் மெசஞ்சரில் டார்க் மோட்

Published On 2019-04-17 09:42 GMT   |   Update On 2019-04-17 09:42 GMT
ஃபேஸ்புக் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. #Messenger



ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதியை உலகம் முழுக்க அனைவருக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஃபேஸ்புக் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இதனை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் ஃபேஸ்புக் டார்க் மோட் வசதியை சோதனை செய்து வந்தது.

முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் டார்க் மோட் வசதிக்கான அறிவிப்பு வெளியானது. பின் நான்கு மாதங்கள் கழித்து இந்த அம்சம் இந்தியா உள்பட சில நாடுகளில் வழங்கப்பட்டது. எனினும், இதனை ஆக்டிவேட் செய்ய எமோஜியை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.



இந்த அம்சத்தை இயக்க மெசஞ்சரில் உங்களது ப்ரோஃபைல் புகைப்படத்தை க்ளிக் செய்து செட்டிங்ஸ் பகுதியில் தெரியும் டார்க் மோட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் திரை முழுக்க இருளாகி இருப்பதை பார்க்க முடியும். டார்க் மோட் ஆக்டிவேட் ஆகியிருக்கும் நிலையில், திரையின் பிரகாசம் குறைக்கப்பட்டிருக்கும். இதனால் குறைந்த வெளிச்சமுள்ள சூழல்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.

முன்னதாக டார்க் மோட் வசதி நிலா எமோஜியை அனுப்பினால் செயல்படும் வகையில் வழங்கப்பட்டிருந்தது. எனினும், இது தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் வழங்கப்பட்டது. ஜனவரி மாத வாக்கில் இந்த அம்சம் சில நாடுகளில் வழங்கப்பட்டிருந்தது.
Tags:    

Similar News