லைஃப்ஸ்டைல்
முதுகில் இருக்கும் கருமையை போக்கும் சூப்பர் டிப்ஸ்

முதுகில் இருக்கும் கருமையை போக்கும் சூப்பர் டிப்ஸ்

Published On 2019-09-26 03:57 GMT   |   Update On 2019-09-26 03:57 GMT
கை, கால்களின் அழகை பராமரிக்கும் நாம் முதுகை கணக்கிலேயே எடுத்துக்கொள்வதில்லை. சில இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி முதுகின் கருமையை போக்கலாம்.
சில பெண்களுக்கு பொதுவாக முகம் வெள்ளையாக காணப்படும். ஆனால் முதுகு கருப்பாக காணப்படும். இதற்கு காரணம் கை, கால்களின் அழகை பராமரிக்கும் நாம் முதுகை கணக்கிலேயே எடுத்துக்கொள்வதில்லை. அந்தவகையில் இதற்கு பல இயற்கை வழிமுறைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

* தேன் மற்றும் எலுமிச்சை இரண்டையும் நன்றாக கலந்து உங்களது முதுகுப்பகுதி முழுவதும் பூசுங்கள். இதனை அரைமணி நேரம் விட்டுவிட்டு பின்னர் சோப்பு போடாமல் குளித்து விடுங்கள். இதனை இரவு நேரத்தில் செய்ய வேண்டும். ஏனெனில் இதனை செய்த பிறகு நீங்கள் வெயிலில் போக கூடாது.

* தேன், கடலை மாவு, மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து முகம் மற்றும் உடலுக்கு பேக் போட்டுக்கொள்ளுங்கள். இதனை 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இது உடலில் இருக்கும் கருமையை நீக்கி பொலிவை தரக்கூடியது.

* விட்டமின் இ கேப்சூல், கடல் உப்பு, தேன் ஆகியவை சேர்ந்த கலவையை எடுத்து உடலுக்கு நன்றாக தேய்த்து குளிக்கவும். இவ்வாறு செய்வதால் மேனி இழந்த பொலிவை திரும்ப பெற்று, கூடுதல் நிறம் பெறும். விட்டமின் இ கேப்சூல் மருந்துக்கடைகளில் கிடைக்கும்.

* தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு நன்றாக தேய்த்து, 20 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இதனை அடிக்கடி செய்தால் மிகச்சிறந்த பலன் கிடைப்பது உறுதி.

* ஆரஞ்சு தோலை காய வைத்து பவுடர் ஆக்கி கொள்ளலாம். அல்லது கடைகளில் கிடைக்கும் ஆரஞ்ச் பவுடரையும் பயன்படுத்தலாம். இந்த பவுடரை ரோஸ் வாட்டர் உடன் கலந்து அப்ளை செய்து சிறிது நேரம் அப்படியே விட்டு வாஷ் செய்தால் கருமை நீங்கும்.
Tags:    

Similar News