செய்திகள்
கோப்புபடம்.

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்

Published On 2021-11-25 08:56 GMT   |   Update On 2021-11-25 08:56 GMT
நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான-முழு விவரங்களை பெற்று விண்ணப்பங்களை பணியாளர்களிடம் வழங்கி பயன்பெறலாம்.
திருப்பூர்:

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என திருப்பூர் மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளனர். 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நகர்ப்புற ஏழை, எளியோரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் நகர்ப்புற வேலை வாய்வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டலத்திற்குபட்ட நல்லூரில் செயல்படுத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 3-வது மண்ட லத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்களை கண்டறியும் வகையில் அனைத்து வீடுகளிலும் கணக்கெடுக்கும் பணி மாநகராட்சி பணியாளர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. 

3-வது மண்டல பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், கணக்கெடுப்பு பணியாளர்களிடம் தாங்கள் கள் இந்த திட்டத்தில் பங்கேற்பது குறித்தும், நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான - முழு விவரங்களை பெற்று விண்ணப்பங்களை பணியாளர்களிடம் வழங்கி பயன்பெறலாம். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News