செய்திகள்
கொரோனா 2-வது அலை குறைகிறது

கொரோனா 2-வது அலை குறைகிறது: மத்திய அரசு தகவல்

Published On 2021-05-12 02:09 GMT   |   Update On 2021-05-12 02:09 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு இப்போது இறங்குமுகம் காட்டத்தொடங்கி இருக்கிறது.
புதுடெல்லி :

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு இப்போது இறங்குமுகம் காட்டத்தொடங்கி இருக்கிறது. நேற்று தொடர்ந்து 2-வது நாளாக தினசரி பாதிப்பில் கணிசமான சரிவைக் காண முடிந்தது. இப்படியே தொடர்ந்தால் அது நிம்மதிப்பெருமூச்சு விட வைக்கும். இதையொட்டி மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நாட்டில் தினசரி பாதிப்பு, இறப்பு குறைந்து வருவதற்கான ஆரம்ப போக்கைப் பார்க்க முடிகிறது. மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, சத்தீஷ்கார் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் கர்நாடகம், கேரளா, தமிழகம், மேற்குவங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்று பரவல் அதிகரிக்கும் போக்கைக் காண முடிகிறது. 13 மாநிலங்களில் தலா 1 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். 26 மாநிலங்களில் பாதிப்பு விகிதம் 15 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவில் கொரோனா மீட்பு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து 2 மாதங்களாக ஏறுமுகத்தில் சென்றது. தற்போது அது இறங்குமுகம் காணத்தொடங்கி இருப்பது கவனத்தை ஈர்க்கிறது.
Tags:    

Similar News