ஆன்மிகம்
பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்

பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மிக குறிப்புகள்

Published On 2019-10-14 08:57 GMT   |   Update On 2019-10-14 08:57 GMT
இந்த சமயத்தில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ஆன்மிக கோட்பாடுகள் உள்ளன. அதில் பெண்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் விதிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் தேங்காய் உடைக்கக் கூடாது. பூசணிக்காயும் உடைக்கக் கூடாது. அவை உடைக்கும் இடத்திலும் இருக்கக் கூடாது என்பர். உடைக்கும் அதிர்ச்சி நுண்அலைகள் மூலம் கர்ப்பத்தை தாக்கும் என்பதால் இவ்வாறு சொல்வார்கள். இரவில் வீட்டை பெருக்கிக் குப்பையைத் தெருவில் இரவிலேயே கொட்டக்கூடாது. காரணம் இது ஐதீகம் மட்டுமல்ல. இதில் ஒரு உண்மையும் இருக்கின்றது. ஏதாவது தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த சிறிய பொருட்கள் குப்பையோடு குப்பையாக இருந்திருந்தால் அதை கொட்டி விடுவோம் அல்லவா?

வீட்டில் சாணம் தெளித்து கோலம் போடுவதை, அந்தந்த வீட்டிற்கு உரிய எஜமானியே செய்வது நல்லது. காரணம் அப்பொழுதுதான் அவர்கள் மீது பற்று வைத்து தன்னை மதிக்கும் குடும்பத்திற்கு லட்சுமி அடியெடுத்து வைத்து செல்வ வளம் சேர்ப்பாள்.

பிள்ளைகளை கோவித்துக் கொள்ளும்பொழுது எதிர்மறை சொற்களையோ, விலங்குகள் பெயரையோ சொல்லித் திட்டக்கூடாது. பொதுவாகவே கோபத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். சினம் இருக்கும் இடத்தில் பணம் இருக்காது என்பர்.

உரல், அம்மி, வாசல் படி, உலக்கை, முறம் போன்றவற்றில் உட்காரக் கூடாது. அன்னம், உப்பு, நெய் இவைகளை கைகளால் பரிமாறக் கூடாது. கரண்டியால் பரிமாற வேண்டும்.
Tags:    

Similar News