செய்திகள்
செல்போன் சேவை

காஷ்மீரில் 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது

Published On 2019-10-14 07:43 GMT   |   Update On 2019-10-14 07:43 GMT
சுமார் 70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியது. எனினும் இணையதளங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதில் தொலைபேசி, செல்போன், இணையதள சேவை முடக்கமும் அடங்கும். பின்னர் அங்கு இயல்பு நிலை திரும்ப தொடங்கியதால் படிப்படியாக இந்த சேவைகள் திரும்ப வழங்கப்பட்டன.

குறிப்பாக ஜம்மு பிராந்தியத்தில் இந்த சேவைகள் முற்றிலும் வழங்கப்பட்ட நிலையில், காஷ்மீரில் வெறும் தொலைபேசி இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன.



தற்போது சுமார் 70 நாட்களுக்குப்பின் அங்கு செல்போன் சேவையும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி போஸ்ட்பெய்டு செல்போன் இணைப்புகள் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. எனினும் பிரீபெய்டு செல்போன் சேவை மற்றும் இணையதள சேவைகள் அனைத்தும் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News