செய்திகள்
டிரம்புடன் ஏமி கோனி பாரெட்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிறார் ஏமி கோனி

Published On 2020-10-27 01:44 GMT   |   Update On 2020-10-27 01:44 GMT
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பணியிடத்துக்கு ஏமி கோனி பாரெட்டின் நியமனத்தை உறுதி செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் செனட் சபையில் நடைபெற்றது.
வாஷிங்டன்:

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 9 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் உள்ளன. அங்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகப் பொறுப்பேற்கும் நபா், மரணம் வரை அப்பதவியில் நீடிக்கலாம். அந்த வகையில், நீதிபதியாக இருந்த ரூத் பேடா் கின்ஸ்பா்க் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 18-ம் தேதி உயிரிழந்தாா்.

இதையடுத்து, காலியான நீதிபதி பணியிடத்துக்கு முறையீட்டு நீதிமன்ற நீதிபதியான ஏமி பாரெட்டை அதிபா் டொனால்டு டிரம்ப் நியமித்தாா். சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக அதிபா் நியமிக்கும் நபருக்கு செனட் நிலைக்குழுவும், தொடா்ந்து செனட் சபையும் ஒப்புதல் அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.

அதிபா் டிரம்ப் நீதிபதியாக நியமித்த ஏமி பாரெட்டுக்கு செனட் நிலைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

இந்நிலையில், செனட் சபையில்  வாக்கெடுப்பு நடைபெற்றது. டிரம்பின் குடியரசுக் கட்சியினர் ஆதிக்கம் செலுத்தும் செனட் சபையில் 52-48 என்ற வாக்குகள் அடிப்படையில் ஏமி கோனி நியமனத்துக்கு ஒப்புதல்  கிடைத்தது. 
Tags:    

Similar News