தொழில்நுட்பம்
பிஎஸ்என்எல்

உலகில் முதல்முறையாக பிஎஸ்என்எல் வழங்கும் அசத்தல் சேவை

Published On 2020-12-11 07:28 GMT   |   Update On 2020-12-11 07:28 GMT
உலகில் முதல்முறையாக பிஎஸ்என்எல் வழங்கும் அசத்தல் சேவை பற்றிய விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.


பிஎஸ்என்எல் மற்றும் ஸ்கைலோடெக் இந்தியா நிறுவனங்கள் இணைந்து உலகில் முதல்முறையாக செயற்கைக்கோள் சார்ந்த இணைய சேவையை இந்தியாவில் வழங்குகிறது. 

இந்த சேவையின் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பம் கொண்டு இந்திய கடல் பகுதிகள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி மற்றும் குஜராத் முதல் வட கிழக்கு இந்திய எல்லைகளுக்குள் சீரான இணைய வசதி வழங்கப்பட இருக்கிறது.



தற்சமயம் இந்த சேவை கனவரக வாகனங்கள், வணிக வாகனங்கள், ரெயில்வே மற்றும் மீன்படி படகுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய தொழில்நுட்பம் செல்லுலார் கிரேடு ஹார்டுவேர் கொண்டு தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள இருக்கிறது.

புதிய தொழில்நுட்பத்தை கொண்டு அதிக தரமான சேவையினை மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்க முடியும் என ஸ்கைலோடெக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதன் மூலம் இந்தியா முழுக்க இணைய சேவையை அனைவருக்கும் வழங்க முடியும்.
Tags:    

Similar News