ஆட்டோ டிப்ஸ்
ஓலா எல்க்ட்ரிக்

கவுகாத்தி விபத்துக்கு நாங்க காரணமா? ஆய்வுக்கு பின் ஓலா எலெக்ட்ரிக் சொன்ன தகவல்!

Published On 2022-04-25 10:46 GMT   |   Update On 2022-04-25 10:46 GMT
அதன்படி விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் ஸ்கூட்டரில் எந்த பிரச்சினையும் இல்லை என ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது.


ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 ப்ரோ ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர், விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் தான் விபத்தில் சிக்க எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கும் ரி-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் தான் காரணம் என அவர் குற்றம்சாட்டி இருந்தார். 

இந்த விவகாரத்தை பல்விந்தர் சிங் தனது டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார். டுவிட்டர் பதிவுக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பதில் அளித்திருக்கிறது. அதன்படி விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் ஸ்கூட்டரில் எந்த பிரச்சினையும் இல்லை என ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது. விபத்து ஏற்பட சரியாக முப்பது நிமிடங்கள் முன் வரை ஸ்கூட்டரின் செயல்பாடுகளை ஓலா பரிசோதனை செய்து இருக்கிறது.

அதன்படி பயனர் ஓலா S1 ப்ரோ மாடலில் பல முறை அதிவேகமாக சென்று இருக்கிறார். 30 நிமிட இடைவெளியில் மட்டும் இந்த இ ஸ்கூட்டர் சுமார் ஐந்து முறை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சென்று இருக்கிறது. மேலும் அதிகபட்சமாக மணிக்கு 115 கிலோமீட்டர் வேகத்தில் சென்று இருக்கிறது. அதன்படி பயனர் அதிவேகமாக சென்றதால் தான் விபத்து ஏற்பட்டு இருக்க வேண்டும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம்  தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News