லைஃப்ஸ்டைல்
டிரைநெட் கம்மல் ஹோல்டர்

இளம் பெண்கள் விரும்பும் டிரைநெட் கம்மல் ஹோல்டர்

Published On 2021-09-25 08:26 GMT   |   Update On 2021-09-25 08:26 GMT
இன்றைய இளம் பெண்களுக்கு தங்கத்தால் செய்த அணிகலன்களை விட பேன்சி அணிகலன்கள் மீது ஆர்வம் அதிகம்.ஆசைபட்டு வாங்கிய அவற்றை பத்திரமாக பாதுகாத்து வைப்பது தான் சவாலான வேலை.
இன்றைய இளம் பெண்களுக்கு தங்கத்தால் செய்த அணிகலன்களை விட பேன்சி அணிகலன்கள் மீது ஆர்வம் அதிகம். உடைகளுக்கு பொருத்தமான நிறத்திலும், வடிவங்களிலும் கிடைப்பதால் விதவிதமான பேன்சி அணிகலன்களை வாங்கி குவித்திருப்பார்கள். ஆசைபட்டு வாங்கிய அவற்றை பத்திரமாக பாதுகாத்து வைப்பது தான் சவாலான வேலை. அதிலும் அவசரமாக வெளியில் கிளம்பும் போது கம்மல்களை ஒன்றாக குவித்துப்போட்டிருக்கும் பெட்டியில் இருந்து சரியான ஜோடியை எடுத்து காதில் மாட்டுவதற்குள் பல நிமிடங்கள் கடந்து போயிருக்கும்.

உங்களுக்கும் இந்த அனுபவம் அடிக்கடி ஏற்படுகிறதா?அப்படியானால் இந்த கைவினை உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

சதுர வடிவ அட்டை (25 செ.மீ x 25 செ.மீ) - 2
அளவுகோல் - 1
கத்திரிக்கோல் - 1
கத்தி - 1
பசை - 1
நெட் (பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வலை) 25 செ.மீ x 25 செ.மீ - 1
துணி 25 செ.மீ x 25 செ.மீ - 1

செய்முறை

* முதலில் ஒரு அட்டையை எடுத்து அதன் நான்கு புறமும் இரண்டு அங்குலம் அளவு குறித்து கொண்டு கத்தியால் போட்டோ ஃபிரேம் போல் வெட்டி எடுத்துக்கொள்ளவும். இதே போல் மற்றொரு அட்டையையும் வெட்டி வைத்து கொள்ளவும்.

* இப்போது அட்டையின் நான்கு ஓரங்களிலும் பசை தடவி பிளாஸ்டிக் வலையை ஓட்டிக்கொள்ளவும்.

* பிறகு வலையின் மீது பசையை தடவி மற்றொரு அட்டையை அதன் மேல் ஒட்டவும்.

* ஒட்டிய அட்டையை துணியின் மீது வைத்து அளவை குறித்து படத்தில் உள்ளபடி துணியின் நடுப்பகுதியை மட்டும் கத்திரிக்கோலால் வெட்டி எடுக்கவும்.

* பின்பு துணியை அட்டையின் இரண்டு பக்கங்களையும் சரியாக மூடுமாறு பசையை தடவி ஒட்ட வேண்டும்.

* இப்போது டிரைநெட் கம்மல் ஹோல்டர் தயார்.

* சாய்த்து வைக்க *ஸ்டாண்ட் வேண்டும் என்றால் முக்கோண வடிவில் ஸ்டாண்ட் தயாரித்து ஒட்டி கொள்ளலாம் அல்லது கம்மல் ஹோல்டரை அப்படியே சுவற்றில்சாய்த்து வைத்தும் பயன்படுத்தலாம்.
Tags:    

Similar News