லைஃப்ஸ்டைல்
ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம்

வீட்டிலேயே ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

Published On 2020-06-25 10:39 GMT   |   Update On 2020-06-25 10:39 GMT
குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பழங்கள் சேர்த்து ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீமை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

திராட்சை, ஆப்பிள், மாம்பழம், கொய்யா, கிவி, ஸ்ட்ராபெரி மற்றும் பப்பாளி பழ கலவை - 2 கப்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள் ஸ்பூன்,
பொடித்த சர்க்கரை - ஒரு டேபிள் ஸ்பூன்,
வெனிலா ஐஸ்கிரீம் - 2 கப்.



செய்முறை

ஆப்பிள், மாம்பழம், கொய்யா, கிவி, ஸ்ட்ராபெரி, பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பழக்கலவையை போட்டு அதனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்துக் கலந்து பிரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.

2 மணி நேரம் கழித்து எடுத்து இதன் மேல் ஐஸ்கிரீமை போட்டு பரிமாறவும்.

விருப்பப் பட்டால் சிறு துண்டுகளாக நறுக்கி வறுத்த பாதாம், முந்திரியை மேலே தூவியும் பரிமாறலாம்.

சூப்பரான ஃப்ரூட் சாலட் வித் ஐஸ்கிரீம் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News