ஆட்டோமொபைல்

இந்தியாவில் புதிய மைல்கல் கடந்த ஃபோக்ஸ்வேகன்

Published On 2019-04-20 11:44 GMT   |   Update On 2019-04-20 11:44 GMT
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல் சாதனையை கடந்துள்ளது. #Volkswagen



ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மைல்கல் கடந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பூனே உற்பத்தி ஆலையில் இருந்து பத்து லட்சமாவது காரை அந்நிறுவனம் வெளியிட்டது. ஃபோக்ஸ்வேகன் இந்திய உற்பத்தியில் பத்து லட்சமாவது மாடலாக அமியோ செடான் மாடல் கார் இருந்தது.

சிறப்பு மைல்கல் சாதனையுடன் ஃபோக்ஸ்வேகன் அமியோ கார் ஃபோக்ஸ்வேகன் இந்தியா தலைவர் குர்பிரதாப் போபாரி மற்றும் ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார் பிரிவு தலைவர் ஸ்டீஃப் நேப் முன்னிலையில் வெளியிடப்பட்டது.



இதுகுறித்து குர்பிரதாப் போபாரி கூறும் போது, 

ஃபோக்ஸ்வேகன் இந்தியா உற்பத்தி ஆலை சர்வதேச அளவில் தரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையான வசதியை பெற்றிருக்கிறது. இதுவே இந்தியாவில் எங்களது வெற்றுக்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறது. 

ஃபோக்ஸ்வேகன் இந்தியா குழுவினரின் அயராத உழைப்பு மற்றும் முயற்சியின் பலனாக எட்டப்பட்டிருக்கும் புதிய மைல்கல் சாதனைக்கு எங்களது மொத்த நிர்வாக குழு சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்திய சந்தையில் பத்து லட்சமாவது காரை வெளியிடுவது எங்களது நிறுவனத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இந்த மைல்கல் மட்டுமின்றி உள்நாட்டு உற்பத்தியில் மேலும் அதிக கவனம் செலுத்தி, உலகத்தரம் வாய்ந்த வாகனங்களை நாட்டுக்கும் பல்வேறு உலக சந்தைகளுக்கு எதிர்காலத்தில் ஏற்றுமதி செய்ய விரும்புகிறோம். என அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News