செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது

ராஜபாளையத்தில் கனமழை: 6-வது மைல் குடிநீர்த்தேக்கம் நிரம்பியது

Published On 2021-11-25 06:26 GMT   |   Update On 2021-11-25 06:26 GMT
ராஜபாளையம் பகுதியில் பெய்த தொடர்மழையினால் நீர்வரத்து பகுதிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தீபாவளியில் இருந்து ஒரு வாரமாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்தது.

பின்பு 2 நாட்கள் நல்ல வெயில் அடித்தது. இந்தநிலையில் மீண்டும் ராஜபாளையம், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம் பகுதிகளில் திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. 1 மணிநேரம் பெய்த மழை பின்பு நள்ளிரவு வரை சாரல் மழையாக பெய்தது.

இதனால் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா, தென்காசி தேசிய நெடுஞ்சாலை, மகப்பேறு மருத்துவமனை, சங்கரன்கோவில் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் அய்யனார் கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் 6-வது மைல் குடிநீர்த் தேக்கம் நிரம்பியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ராஜபாளையம் பகுதியில் பெய்த தொடர்மழையினால் நீர்வரத்து பகுதிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீர்த்தேக்கம் நிரம்பியதால் நிலத்தடி நீர் மட்டமும் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News