உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவில்கள் மூடலால் பூக்கள் விலை சரிவு

Published On 2022-01-08 07:42 GMT   |   Update On 2022-01-08 07:42 GMT
கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தது.
திருப்பூர்:

மார்கழி தொடக்கம் முதல் பனிப்பொழிவு காரணமாக பூ வரத்து வெகுவாக குறைந்து விலை உயர்ந்திருந்தது. குறிப்பாக கோவில்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் அரளி கிலோ ரூ.240 முதல் ரூ.300 வரையும், செவ்வந்தி ரூ.180 முதல் ரூ.220 வரையும் விற்றது. 

கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை வரை வழிபாட்டுதலங்களை மூட அரசு உத்தரவிட்டது. மார்கழி மாதம் துவங்கியது முதல் கோவில்களில் மண்டல பூஜைகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில் கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைந்தது. ஒரு கிலோ அரளி பூ கிலோ ரூ. 100 முதல் ரூ.120க்கும், செவ்வந்தி ரூ.100க்கும் விற்றது. 

முதல் வாரத்திலேயே விலை குறைந்ததால், பூ வியாபாரிகள் கவலை அடைந்தனர். கிலோ ரூ.1,400 ஆக இருந்த மல்லிகை கிலோ ரூ.1100க்கு விற்றது.
Tags:    

Similar News