உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

முழு ஊரடங்கை மீறிய தொழிற்சாலை, இறைச்சி கடைகளுக்கு அபராதம்

Published On 2022-01-24 09:56 GMT   |   Update On 2022-01-24 09:56 GMT
ஆம்பூரில் முழு ஊரடங்கை மீறி இயங்கிய தொழிற்சாலை, இறைச்சி கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
ஆம்பூர்:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக் கிழமையான நேற்று முழு ஊரடங்கு அறிவித்தது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். 

உரிய ஆவணங்களுடன் சென்றவர்கள் மட்டும் அத்தியாவசிய பணிகளுக்கு வாகனங்கள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசின் உத்தரவை மீறி ஆம்பூரில் பல இடங்களில் ஷூ கம்பெனி நிறுவனங்கள் தொழிலாளர்கள் கூட்டமாக வரவழைத்து பணியில் ஈடுபடுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. 

இதைத்தொடர்ந்து ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் ஷகிலா துப்புரவு அலுவலர் ராஜரத்தினம் உள்ளிட்டோர் குழுவினர் அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் விதிகளை மீறி ஏங்கிய 2 ஷூ கம்பெனி தொழிற்சாலைகளும் 4 கடைகள் ஆகியவற்றில் மொத்தம் 11.500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல ஆம்பூர் டவுன் போலீசார் நடத்திய சோதனையில் 3 இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
Tags:    

Similar News