செய்திகள்
விஷம்

கோவையில் வங்கி முன்பு விவசாயி தற்கொலை

Published On 2019-08-01 11:33 GMT   |   Update On 2019-08-01 16:07 GMT
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கோவையில் இந்தியன் வங்கி முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

சேலம் மாவட்டம் சங்ககிரி கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி பூபதி. இவர் கடந்த 2005 -ம் ஆண்டு பால் பண்ணை வைப்பதற்காக நண்பர்கள் மூவருடன் சேர்ந்து பத்திரங்களை அடமானம் வைத்து இந்தியன் வங்கியில் கடன் வாங்கியுள்ளார்.

பால்பண்ணை லாபகரமாக இயங்காததால், தன்னுடைய கடனை திருப்பி செலுத்திட தீர்மானித்தார். இதற்காக அவர் வங்கி சென்று எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று கேட்டார். அப்போது 3 பேர் கடன் பெற்றதில் தன்னுடைய பங்கை திருப்பி செலுத்துவதற்காக வங்கிக்கு வந்த பூபதியிடம் நண்பர்களது கடனையும் சேர்த்து செலுத்துமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியான பூபதி வங்கிக்கு வெளியே விஷம் குடித்து  தற்கொலை கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விவசாயி பூபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Tags:    

Similar News