உள்ளூர் செய்திகள்
முல்லை பெரியாறு அணை

முல்லை பெரியாறு, வைகை அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2022-01-20 06:06 GMT   |   Update On 2022-01-20 06:06 GMT
முல்லை பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதை தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளா பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் கேரளா பகுதிக்கு உபரியாக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும் தமிழக பகுதிக்கும் தண்ணீர் திறப்பு 600 கனஅடியாக குறைக்கப்பட்டது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது 2ம் போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் நீர்திறப்பு 900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு 323 கனஅடி நீர் வருகிறது. நீர்மட்டம் 137.30 அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 69.90 அடியாக உள்ளது. நேற்று குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் நீர் திறப்பு 719 கனஅடியாக உயர்ந்துள்ளது. 305 கனஅடி நீர்வருகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.20 அடியாக உள்ளது. 36 கனஅடி நீர் வருகிறது. 80 கனஅடி நீர்திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.28 அடியாக உள்ளது. வருகிற 25 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.
Tags:    

Similar News