செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள்

திருவேற்காட்டில் வீட்டில் பதுக்கிய செம்மரக்கட்டை பறிமுதல்

Published On 2019-08-06 06:37 GMT   |   Update On 2019-08-06 06:37 GMT
திருவேற்காட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் ரூ.10 லட்சம் ஆகும்.
பூந்தமல்லி:

திருவேற்காடு தேவி நகரை சேர்ந்தவன் ராஜேஷ். ரவுடியான இவன் மீது பல வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கு தொடர்பாக கொரட்டூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் இன்று காலை அவனை தேடி திருவேற்காடு வந்தனர்.

அப்போது அவன் திருவேற்காடு அருகே உள்ள சின்னகோலடி என்ற இடத்தில் நண்பர் கோபி என்பவர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

அவரது வீட்டில் ஒவ்வொரு அறையாக போலீசார் சோதனை செய்தனர். அப்போது சமையலறை அருகேயுள்ள ஒரு அறையில் 25 துண்டு செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 2½டன் எடையுள்ள அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். இது குறித்து போலீசாரிடம் கோபி கூறும்போது, “ கடந்த 4-ந் தேதி தனது வீட்டுக்கு வந்த ரவுடி ராஜேஷ் செம்மரக்கட்டைகளை கொண்டு வந்து பதுக்கி வைத்ததாக” தெரிவித்தார்.

எனினும் இது குறித்து போலீசுக்கு தகவல் தராததற்காக கோபியை போலீசார் கைது செய்தனர். ரவுடி ராஜேசை தேடி வருகிறார்கள்.

செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து ரவுடி ராஜேசும், கோபியும் கூட்டாக விற்பனை செய்து வந்தார்களா? இவர்களுக்கு செம்மரக்கட்டை கிடைத்தது எப்படி? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News