செய்திகள்
கொரோனா வைரஸ்

திருச்சி மத்திய மண்டலத்தில் 357 பேருக்கு புதிதாக தொற்று

Published On 2021-04-08 05:58 GMT   |   Update On 2021-04-08 05:58 GMT
கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தஞ்சை மற்றும் திருச்சியில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்து பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
திருச்சி:

திருச்சி மத்திய மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தஞ்சை மற்றும் திருச்சியில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்து பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

150 தொற்றாளர்கள் வரை திருச்சியில் கண்டறியப்பட்ட நிலையில் கடந்த 2 நாட்களில் சற்றே குறைந்துள்ளது. தஞ்சையில் நேற்று 108 பேருக்கும், திருச்சியில் 91 பேருக்கும் தொற்று உறுதியானது. அதே போல் நேற்று ஒரே நாளில் மத்திய மண்டலத்தில் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நாகையில் 60 வயது முதியவரும், தஞ்சையில் 70 வயது முதியவரும், திருச்சியில் 71 வயது முதியவரும் இறந்தனர். அவர்கள் மூவரும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியில் தொற்று பாதித்த பெரும்பாலானவர்களுக்கு லேசான அறிகுறி இருந்தததால் அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்புவார்கள் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

இதேபோல் நாகையில் 59 பேரும், திருவாரூரில் 53 பேரும், புதுக்கோட்டையில் 25 பேரும், கரூரில் 19 பேரும், அரியலூரில் 17 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டனர். பெரம்பலூரில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று இல்லாத நிலையில் நேற்று புதிதாக 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News