செய்திகள்
தமிழக சட்டசபை

சட்டசபையில் 27 அரசுத்துறை மானிய கோரிக்கைகள் இன்று ஒரே நாளில் நிறைவேற்றம்

Published On 2020-03-24 08:46 GMT   |   Update On 2020-03-24 08:46 GMT
தமிழக சட்டசபையில் காவல் துறை, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை உட்பட 27 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு இன்றே நிறைவேற்றப்பட்டன.
சென்னை:

சட்டசபையில் அரசுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வந்தது.

இதில் 27 மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு அந்த துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் சட்டசபையை இன்று முடித்துக்கொள்ள நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து இன்று காவல் துறை, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித்துறை, ஓய்வூதியங்கள், தொழில் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, இந்து அறநிலையத்துறை உள்பட 27 துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டு இன்றே நிறைவேற்றப்பட்டன. அந்தந்த துறைகளுக்கான நிதிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதே போன்ற சூழ்நிலை கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 31-ந்தேதி ஏற்பட்டது. அப்போது தாளிமுத்து சபாநாயகராக இருந்தார். அன்றைய தினம் ஒரு அவசர நிலை காரணமாக 11 மானியக் கோரிக்கைகள் ஒரே நாளில் எடுக்கப்பட்டு அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.

அதே போல இப்போது 27 மானிய கோரிக்கைகளுக்கு நிதிகளை ஒதுக்கி அனுமதி அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News