செய்திகள்
நாய்

வில்லியனூரில் ஒரே நாளில் 44 பேரை கடித்து குதறிய வெறிநாய்

Published On 2021-10-16 02:52 GMT   |   Update On 2021-10-16 02:52 GMT
வில்லியனூர் பகுதியில் ஒரே நாளில் 44 பேரை வெறிநாய் கடித்து குதறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வில்லியனூர்:

வில்லியனூர் பகுதியில் நாய், மாடு, பன்றிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதையடுத்து போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை ஆரியப்பாளையம் பகுதியில் வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து செல்வோர், மோட்டார் சைக்கிளில் செல்வோர் என 20 பேரை துரத்தி துரத்தி கடித்தது.

பின்னர் வில்லியனூர் மார்க்கெட், தில்லைநகர், திருக்காமீஸ்வரர் நகர் பகுதிக்குள் புகுந்த அந்த நாய் மேலும் 24 பேரை கடித்து குதறியது. இதில் காயம் அடைந்த 44 பேரும் சிகிச்சை பெறுவதற்காக வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படையெடுத்தனர்.

ஒரே நாளில் 44 பேரை வெறிநாய் கடித்து குதறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வெறி நாயை பிடிக்கும் நடவடிக்கையில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News