செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

வைரல் வீடியோ ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் போராட்டமா?

Published On 2019-11-20 06:16 GMT   |   Update On 2019-11-20 06:16 GMT
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோ ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகி உள்ளது. வைரல் வீடியோவினை ஃபேஸ்புக்கில் பலர் பகிர்ந்து வருகின்றனர். 

உண்மையில் இந்த வீடியோ பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஃபியாஸ் இலக்கிய விழாவையொட்டி, மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தியபோது எடுக்கப்பட்டது என ஆய்வில் தெரியவந்துள்ளது.



லாகூரில் நடைபெற்ற ஃபியாஸ் விழாவினை இணையத்தில் தேடியபோது, வைரல் வீடியோவின் உண்மை பதிப்பு கிடைக்கப்பெற்றது. இதே வீடியோவினை பலர் பகிர்ந்துள்ளனர். வீடியோவில் ஃபியாஸ் விழா 2019 என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கிறது. இதுபற்றிய ஃபேஸ்புக் பதிவுகளில் ஃபியாஸ் நிகழ்வில் மாணவர்களின் பேரணி பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள், தங்கள் விடுதிக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக் கோரி ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தானை சேர்ந்த வீடியோ ஒன்று ஜவகர்லால் நேரு மாணவர் போராட்டமாக வைரலாக்கப்பட்டு இருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

Tags:    

Similar News