செய்திகள்
கோப்புப்படம்

அஜாக்கிரதையால் ரூ.188 கோடி பரிசை கோட்டை விட்ட அமெரிக்க பெண்

Published On 2021-05-15 08:15 GMT   |   Update On 2021-05-15 08:15 GMT
அமெரிக்காவில் அஜாக்கிரதையால் லாட்டரி சீட்டில் விழுந்த ரூ.188 கோடி பரிசு பணத்தை இழந்த பெண் சட்ட ரீதியாக போராட்டம் நடத்தி வருகிறார்.
கலிபோர்னியா:

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் சூப்பர் லோட்டோ பிளஸ் என்ற லாட்டரி சீட்டு விற்கப்பட்டது.

இதன் அதிகபட்ச பரிசுத் தொகை ரூ.188 கோடியாகும். இந்த சீட்டை பெண் ஒருவர் வாங்கி இருந்தார். அவருக்கு ரூ.188 கோடி பரிசு கிடைத்தது.

ஆனால் அவருடைய துரதிருஷ்டம் லாட்டரி சீட்டை காணவில்லை. லாட்டரி சீட்டை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தார். அதை பத்திரப்படுத்தி வைக்காமல் பேண்ட் பாக்கெட்டிலேயே இருந்தது.

ஆனால் இதை கவனிக்காமல் துணியை துவைத்து விட்டார். அதில் லாட்டரி சீட்டு மாயமாகி இருந்தது. இந்த வி‌ஷயம் அவருக்கு தெரியாது. இந்த நிலையில் அவர் வாங்கிய லாட்டரிக்கு ரூ.188 கோடி பரிசு விழுந்திருந்தது.

லாட்டரி சீட்டை தேடினார். அப்போதுதான் அது காணாமல் போயிருந்தது தெரியவந்தது. எனவே லாட்டரி சீட்டு நிறுவனத்திடம் நான் வாங்கிய சீட்டுக்கு தான் பரிசு விழுந்துள்ளது. அதை காணவில்லை.

எனவே எனக்கே பரிசு தரவேண்டும் என்று கூறினார். அதற்காக அந்த கடையில் சீட்டு வாங்கிய சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆதாரமாக எடுத்து சென்றார்.

ஆனால் இது போதாது. லாட்டரி சீட்டு இருந்தால் தான் பரிசு கொடுக்க முடியும் என்று அந்த நிறுவனம் கூறிவிட்டது.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தவிக்கிறார். சட்ட ரீதியாக போராடி எப்படியாவது பரிசு பணத்தை பெற்று விட வேண்டும் என்று அவர் முயற்சித்து வருகிறார். 
Tags:    

Similar News