செய்திகள்
தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.7.64 லட்சம் இழப்பு- தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

Published On 2021-01-09 09:08 GMT   |   Update On 2021-01-09 09:08 GMT
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.7 லட்சத்து 64 ஆயிரத்தை இழந்த மனவேதனையில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர்:

திருப்பூர்- ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ரெயில்வே கேட்டில் கடந்த 5-ந் தேதி 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலை துண்டான நிலையில் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த ரெயில்வே இன்ஸ்பெக்டர் அப்புசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குளத்தை சேர்ந்த எல்வின் பிரட்ரிக்(வயது28) என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில ஆண்டுகளாக கோவை பீளமேடு அருகே உள்ள ஆவாரம்பாளையத்தில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார்.

எல்வின் பிரட்ரிக் எப்போது செல்போனில் பணம் கட்டி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதற்காக பலரிடம் கடனும் வாங்கியுள்ளளார். ஆனால் ஆன்லைன் சூதாட்டத்தில் செலுத்திய பணத்தை அவரால் திரும்ப எடுக்க முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து பணம் கட்டி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி வந்தார். இதுவரை ரூ.7 லட்சத்து 64 ஆயிரத்தை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார்.

இதற்கிடையே அவருக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்க தொடங்கி விட்டனர். தன்னால் இழந்த பணத்தையும் மீட்க முடியவில்லை.

கடன் வாங்கியவர்களுக்கும் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லையே என மன வருத்தத்தில் இருந்துள்ளார். தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்கவும் தான் வேலை பார்த்த கம்பெனி மற்றும் நண்பர்கள் யாரிடமும் சொல்லாமல் நேராக திருப்பூருக்கு சென்றார். பின்னர் அங்கு சுற்றி திரிந்த அவர் ஆன்லைனில் இழந்த பணத்தை மீட்க முடியவில்லையே என வேதனையுடன் இருந்த அவருக்கு தற்கொலை எண்ணம் தோன்றியுள்ளது. உடனடியாக ஊத்துக்குளி சாலையில் உள்ள ரெயில்வே கேட்டிற்கு சென்ற அவர் அங்குள்ள ரெயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News