உள்ளூர் செய்திகள்
கனமழை

தமிழகத்தில் டிச.4-ம் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2021-12-02 07:40 GMT   |   Update On 2021-12-02 07:40 GMT
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. நவம்பர் மாதம் முழுவதும் அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியதால் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது.

மேலும், டிசம்பர் மாதத்தில் என்றும் இல்லாத அளவில் மழை பதிவு இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
 
இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக குறைவான அளவில் மழை பெய்து வந்தது. இதனால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.



இந்நிலையில்,  தமிழகத்தில் வரும் 4-ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

அதன்படி, வரும் 4-ம் தேதி அன்று மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, டிசம்பர் 5-ம் தேதி அன்று நீலகிரி, கோவை, சேலம், தருமபுரி, ஈரோடு, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், டிசம்பர் 6-ம் தேதி அன்று நீலகிரி, கோவை, நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. அந்தமானில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது:12 மணி நேரத்தில் மண்டலமாக மாறும்
Tags:    

Similar News