தொழில்நுட்பம்
சவுண்ட்கோர் R100

பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

Published On 2021-08-05 11:11 GMT   |   Update On 2021-08-05 11:11 GMT
சவுண்ட்கோர் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, நீண்ட நேர பேட்டரி பேக்கப் அம்சங்களை கொண்டிருக்கிறது.


ஆன்கர் நிறுவனத்தின் ஆடியோ சார்ந்த சாதனங்களை உற்பத்தி செய்யும் சவுண்ட்கோர் இந்தியாவில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்தது. சவுண்ட்கோர் R100 என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் இன்ஸ்டன்ட் ஆட்டோ பேரிங், 25 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது.

இத்துடன் 10mm கிராபீன் டைனமிக் டிரைவர்கள், ப்ளூடூத் 5, ஹால்-சென்சார் தொழில்நுட்பம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ஹால்-சென்சார் தொழில்நுட்பம் சீரான கனெக்டிவிட்டி வழங்குகிறது. இயர்பட்ஸ் கேசை திறந்ததும் மூன்றே நொடிகளில் இயர்பட்ஸ் இணைப்பை சாத்தியப்படுத்துகிறது. 



சவுண்ட்கோர் R100 மாடலில் IPX5 தர ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. மேலும் இதன் சார்ஜிங் கேஸ் 25 மணி நேரத்தற்கு பேக்கப் வழங்குகிறது. இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதனை 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 2 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.

புதிய சவுண்ட்கோர் R100 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1999 ஆகும். எனினும், ப்ளிப்கார்ட் தளத்தில் ரூ. 1799 எனும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Tags:    

Similar News