செய்திகள்

தொடர்ச்சியாக 7 தோல்வி- ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் மோசமான சாதனையை பதிவு செய்த ஆஸ்திரேலியா

Published On 2018-11-04 13:35 GMT   |   Update On 2018-11-04 13:35 GMT
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம் ஆஸ்திரேலியா மிகவும் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. #AUSvSA
ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் அணி சமீப காலமாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர்- அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் மூன்று ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

பெங்களூருவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் அக்டோபர் 1-ந்தேதி நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு சோதனைக் காலமாக அமைந்தது. தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆகியோர் ஓராண்டு தடைபெற்றார்கள்.

அதன்பின் ஆஸ்திரேலியா ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் ஐந்து போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. தற்போது தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.



இதன்மூலம் தொடர்ச்சியாக ஏழு ஒருநாள் போட்டியில் தோல்வியைச் சந்தித்து ஒருநாள் போட்டியில் மிகவும் மோசமான சாதனைக்கு தள்ளப்பட்டுள்ளது. 1996-ம் ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி முதல் நவம்பர் 3-ந்தேதி வரை இதேபோல் தோல்வியை சந்தித்திருந்தது. ஆனால் இதுபோன்ற மோசமான தோல்வியாக அது இல்லை.

இது ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது மிகக்குறைந்த ஸ்கோராகும்.

முதல் 10 ஓவரான பவர்பிளேயில் 19 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 2001-ல் இருந்து சொந்த மைதானத்தில் மிகக்குறைந்த ஸ்கோரை (முதலில் பேட்டிங்) பதிவு செய்துள்ளது. 2012-ல் இங்கிலாந்துக்கு எதிராக 15 ரன்கள் எடுத்திருந்தது.

2018-ல் 11 போட்டியில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகவும் மோசமான வருடம் இதுதான்.
Tags:    

Similar News