ஆட்டோமொபைல்
பிஎம்டபிள்யூ ஆர்18 கிளாசிக்

பிஎம்டபிள்யூ ஆர்18 புது வேரியண்ட் அறிமுகம்

Published On 2020-10-27 08:43 GMT   |   Update On 2020-10-27 08:43 GMT
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஆர்18 மோட்டார்சைக்கிளின் புது வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது.


பிஎம்டபிள்யூ நிறுவனம் ஆர்18 மோட்டார்சைக்கிளின் கிளாசிக் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த எடிஷன் இந்தியாவில் கிடைக்கும் ஆர்18 பர்ஸ்ட் எடிஷனை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

புதிய ஆர்18 கிளாசிக் மாடலில் புல் எல்இடி ஹெட்லைட், ஆக்சிலரி லைட்கள், பெரிய விண்ட்ஸ்கிரீன், சேடிள்பேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இவை அனைத்தையும் கழற்றக்கூடிய வசதி மற்றும் ஸ்டான்டர்டு ஆர்18 வேரியண்ட்டில் சேர்த்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.



ஆர்18 கிளாசிக் மாடலில் 16 இன்ச் வீல், ஸ்டிரெயிட் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 1802சிசி, பாக்சர் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 89.9 பிஹெச்பி பவர், 158 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

இவைதவிர எலெக்டிரானிக் குரூயிஸ் கண்ட்ரோல், டிராக் டார்க் கண்ட்ரோல், கீலெஸ் ஸ்டார்ட், ரிவர்ஸ் கியர் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரும் ஆர்18 கிளாசிக் இந்திய சந்தையில் 2021 வாக்கில் அறிமுகமாகும் என தெரிகிறது.

Tags:    

Similar News