இஸ்லாம்
அன்னை அஜ்மத் பீவி தர்காவில் சந்தனக்கூடு விழா

அன்னை அஜ்மத் பீவி தர்காவில் சந்தனக்கூடு விழா

Published On 2022-02-10 04:48 GMT   |   Update On 2022-02-10 04:48 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலையில் உள்ள அன்னை அஜ்மத் பீவி தர்காவில் ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலையில் அன்னை அஜ்மத் பீவி தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு விழா வெகுவிமர்சியாக நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டு கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் கந்தூரிவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒருவார காலம் சிறப்பு பாத்தியாக்கள் ஓதப்பட்டு முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு வைபவம், நேற்று விடியற்காலை 4 மணிக்கு சந்தனம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அன்னை அஜ்மத் பீவி தர்காவில் சந்தனம் பூசும் வைபவம் சிறப்புத்துவா ஓதி வழிபாடு நடைபெற்றது.

இதில் சென்னை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மவுலானாவின் கலிபாக்கல், சீடர்கள், பங்கேற்றனர். இந்த விழாவில் மத சார்பற்று அனைத்து மதத்தினரும் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News