தொழில்நுட்பம்
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்

புது ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்

Published On 2021-07-03 10:54 GMT   |   Update On 2021-07-03 10:54 GMT
சியோமியின் ரெட்மி நோட் சீரிஸ் மாடல்களுக்கு 2 ஆண்ட்ராய்டு அப்டேட், 3 MIUI அப்டேட்கள் வழங்கப்படுகின்றன.


சியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமான ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் MIUI 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் கொண்டிருந்தது. பின் இந்த ஸ்மார்ட்போனிற்கு MIUI 12 அப்டேட் வழங்கப்பட்டது. 



அந்த வரிசையில் தற்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலுக்கான ஆண்ட்ராய்டு 11 அப்டேட் V12.0.1.0.RJXINXM பில்டு நம்பர் கொண்டுள்ளது. தற்போது இது ஸ்டேபில் பீட்டா வடிவில் வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக இந்த அப்டேட் அனைவருக்கும் கிடைக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என தெரிகிறது. வழக்கமாக ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட், மூன்று MIUI அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News