இந்தியா
பிரதமர் மோடி, ராகுல் காந்தி

சீன ஆக்ரமிப்பு நிலத்தை இந்தியா எப்போது பெறும் - பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி

Published On 2022-01-28 08:35 GMT   |   Update On 2022-01-28 10:12 GMT
அருணாச்சலப் பிரதேச இளைஞரை,சீனா இந்தியா வசம் ஒப்படைத்துள்ள நிலையில்,ஆக்ரமிப்பு நிலம் குறித்து ராகுல் கேள்வி எழுப்பினார்.
புதுடெல்லி:

அருணாசல பிரதேசத்தின்  ஜிடோ கிராமத்தை சேர்ந்த மிரம் தரோன் என்ற 17 வயது சிறுவன் சீனாவின் எல்லைக்கு அருகே  உள்ள துதிங் பகுதிக்கு  வேட்டையாட சென்றபோது சீன ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். அவரை சீன ராணுவம் கடத்திச்சென்றதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து சீன ராணுவத்திடம் இருந்து சிறுவனை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு ராகுல்காந்தி வலியுறுத்தி இருந்தார். 

இந்திய ராணுவம், சீன ராணுவத்தை தொடர்புகொண்டு சிறுவனை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுத்தது. முதலில் சிறுவன் தங்களிடம் இல்லை என மறுத்த சீன ராணுவம், பிறகு சிறுவன் வழித்தவறி அவர்களுடைய பகுதிக்குள் வந்துவிட்டதாக கூறியது. இதைத் தொடர்ந்து மிரம் தரோனை இந்திய ராணுவத்திடம் சீனா ராணுவம் ஒப்படைத்தது. 

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள வாச்சா-டாம் தொடர்பு இடத்தில், மிரம் தரோனை சீன ராணுவம் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது. இந்த நடவடிக்கையை எடுத்த பெருமைமிக்க இந்திய ராணுவத்திற்கு நன்றி என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

மிரம் திரோனை சீனா திருப்பி அனுப்பியது ஆறுதலாக இருந்தது. சீனா ஆக்கிரமித்துள்ள நிலத்தை இந்தியா எப்போது பெறும் பிரதமரே?. இவ்வாறு ராகுல் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


Tags:    

Similar News