தொழில்நுட்பம்
சியோமி எம்ஐ10 யூத் எடிஷன் 5ஜி

நான்கு பிரைமரி கேமராக்கள் கொண்ட சியோமி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2020-04-28 07:38 GMT   |   Update On 2020-04-28 07:38 GMT
ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர், குவாட் கேமரா செட்டப் கொண்ட சியோமி எம்ஐ10 யூத் எடிஷன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.



சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது எம்ஐ 10 யூத் எடிஷன் 5ஜி ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.57 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், HDR, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. 

இதில் பில்ட் இன் 5ஜி வசதி, அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 120° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி 5x டெலிபோட்டோ லென்ஸ், OIS, 2 செமீ மேக்ரோ கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக் கொண்டிருக்கும் எம்ஐ10 யூத் எடிஷன் 5ஜி மாடலில் 4160 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



சியோமி எம்ஐ10 யூத் எடிஷன் 5ஜி சிறப்பம்சங்கள்

- 6.57 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED 20:9 டிஸ்ப்ளே, HDR 10+
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
- அட்ரினோ 620 GPU
- 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- 8 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி /  256 ஜிபி (UFS 2.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11
- டூயல் சிம்
- 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 0.8μm, f/1.79
- 8 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
- 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், OIS
- 2 செமீ மேக்ரோ கேமரா
- 16 எம்பி செல்ஃபி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- 5ஜி SA/ NSA / டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 4160 எம்ஏஹெச் பேட்டரி
- 22.5 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

சியோமி எம்ஐ10 யூத் எடிஷன் 5ஜி மாடல் டீப் கிரே, புளு-கிரீன் கிரேடியன்ட், ஆரஞ்சு, மில்க் கிரீன் மற்றும் பின்க்-வைட் கிரேடியன்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 2099 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 22,630), டாப் எண்ட் மாடல் விலை 2799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 30,150) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News