செய்திகள்
மாநிலங்களவை

மாநிலங்களவை காலவரம்பின்றி ஒத்திவைப்பு- கொரோனா அச்சுறுத்தலால் முன்கூட்டியே கூட்டத்தொடர் நிறைவு

Published On 2020-09-23 09:50 GMT   |   Update On 2020-09-23 09:50 GMT
மாநிலங்களவை கூட்டத்தொடர் அக்டோபர் 1-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் 8 நாட்களுக்கு முன்பாகவே நிறைவு செய்யப்பட்டது.
புதுடெல்லி:

மாநிலங்களவை கூட்டத்தொடர் முன் கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த கூட்டத்தொடர்  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 நாட்களுடன் முடித்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

மாநிலங்களவையை காலவரம்பின்றி ஒத்திவைப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். மாநிலங்களவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பிரதமர் மோடி, அவைக்கு வந்திருந்தார்.  

கடைசி நாளான இன்று எதிர்க்கட்சிகள் அவையில் இல்லாத நிலையில், தொழிலாளர் தொடர்பான 3 சட்ட மசோதாக்களை நிறைவேற்றக்கூடாது என எதிர்க்கட்சிகள் சார்பில் அவைத்தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட 3 தொழிலாளர் மசோதாக்களும் இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News