செய்திகள்
காபி

பால் விலை உயர்வு எதிரொலி: தஞ்சை ஓட்டல்களில் டீ, காபி விலை உயர்ந்தது

Published On 2019-08-20 10:37 GMT   |   Update On 2019-08-20 10:37 GMT
தமிழகத்தில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 6 உயர்ந்துள்ளதால் தஞ்சை ஓட்டல்களில் டீ, காபி விலையையும் கணிசமாக உயர்த்தி உள்ளனர்.

தஞ்சாவூர், ஆக .20-

தமிழகத்தில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 6 வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த அமல் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.பால் விலை உயர்வால் இல்லத்தரசிகள், பொதுமக்கள் பலர் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.

பாலுக்கு என்று தனியாக மாதத்தில் கூடுதலாக பணம் ஒதுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயர்வால் நடுத்தர மக்கள் தாங்கள் வாங்கும் சம்பளத் தில் பாலுக்கு என்று தனியாக பணம் செலவாகிறது என புலம்புகின்றனர்.

இதற்கு மேலாக சில வீடுகளில் டீ, காபி குடித்து வந்தவர்கள் தற்போது அதனை தவிர்த்து வருகின்றனர். மேலும் டீ, காபிகளில் பால் சேர்ப்பதையும் கூடுமான வரை தவிர்க்கின்றனர்.

இந்த நிலையில் தஞ்சையில் சில கடைகளில் பால் விலை உயர்வால் டீ ,காபி விலையையும் உயர்த்தி உள்ளனர்.இதற்கு முன் கடைகளில் டீ -ரூ.8-க்கும், காபி ரூ. 10- க்கும் விற்பனை செய்து வந்தனர். தற்போது பால் விலை உயர்வால் கடைக்காரர்களும் டீ, காபி விலையையும் கணிசமாக உயர்த்தி உள்ளனர். புதிய விலையாக டீ ரூ. 10 மற்றும் காபி ரூ. 12- என்று விலை நிர்ணயம் செய்துள்ளனர். இந்த புதிய நடைமுறை இன்று முதல் கடைக்காரர்கள் அமல்படுத்தினர்.மேலும் சில ஓட்டல்களில் அதற்கு ஏற்றாற்போல் விலையை உயர்த்தியுள்ளனர்.கடை களில் டீ காபி விலை உயர்வால் சாமானிய மக்கள் மற்றும் தொழிலாளர்கள் டீ, காபியை அதிக விலைக்கு வாங்கி குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.தஞ்சையில் தற்போது சில கடைகளில் தான் இந்த விலை உயர்வு வந்துள்ளது.இனிப் போகப் போக மற்ற கடைகளிலும் டீ, காபி விலை உயரும் என கூறப்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பால் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இதனால் நாங்கள் மாதத்திற்கு பால் வாங்குவதற்கு என்று தனியாக பணம் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது கடைகளிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளதால் நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை. குழந்தைகள் உள்ள வீட்டில் கண்டிப்பாக பால் வாங்க வேண்டிய நிலை உள்ளது. அவர்களும் வேறு வழி இன்றி அதிக விலைக்கு பால் வாங்கி வருகின்றனர்.

இனி மற்ற உணவுப் பொருட்களின் விலையும் உயருமோ என அச்சப் படுகிறோம்.உடனடியாக பால் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.யாரும் பாதிக்கப்படாத அளவுக்கு பால் விலை உயர்வை குறைக்க வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News