செய்திகள்
விராட் கோலி, ஷர்துல் தாகூர்

ரன்களாக குவித்து தள்ளிய பேட்ஸ்மேன்கள்: தள்ளாடிய பந்து வீச்சாளர்கள்...

Published On 2021-03-29 10:25 GMT   |   Update On 2021-03-29 10:56 GMT
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளத்தில் மூன்று போட்டிகளிலும் 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டன.

பந்து வீச்சாளர்கள் கடும் சோதனைக்கு உள்ளாகினர். நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்தியா 329 ரன்கள் குவித்தது. 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் இந்தியா எளிதாக வெற்றி பெறும் நிலை இருந்தது. சாம் கர்ரன் சிறப்பான பேட்டிங் செய்ய போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. கர்ரன் ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் அடிக்க இங்கிலாந்து அணி 322 ரன்கள் எடுத்து 7 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். சாம் கர்ரனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. முதல் போட்டியில் 94 ரன்களும், 2-வது போட்டியில் சதமும் அடித்த பேர்ஸ்டோவ் தொடர் நாயகன் விருதை வென்றார்.



போட்டியின்போது பேட்டியளித்த விராட் கோலி, பேட்டிங் செய்வதற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் 67 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட் சாய்த்த ஷர்துல் தாகூருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்காதது ஆச்சர்யமளிக்கிறது. அதேபோல் இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமாருக்கு தொடர் நாயகன் விருது வழங்காததும் ஆச்சர்யம் அளிக்கிறது’’ என்றார்.

இந்தத் தொடரில் விராட் கோலி இரண்டு அரைசதங்கள், ரிஷப் பண்ட் இரண்டு அரைசதம், கேஎல் ராகுல் அரைசதம், சதம் விளாசினர். தவானும் இரண்டு அரைசதம் அடித்தார்.

பென் ஸ்டோக்ஸ், ஜேசன் ராய், சாம் கர்ரன், ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, தாவித் மலான் ஆகியோர் தலா ஒரு அரைசதம் அடித்தனர்.

பந்து வீச்சில் ஷர்துல் தாகூர் 7 விக்கெட்டும் புவி, பிரசித் கிருஷ்ணா தலா 6 விக்கெட்டும், மார்க் வுட் 5 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News