ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: சுவாமி-அம்பாள் வீதிஉலா

Published On 2019-07-09 08:17 GMT   |   Update On 2019-07-09 08:17 GMT
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது நாள் திருவிழாவில் காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 8.30 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் வீதிஉலா சென்றனர்.

இரவு 8 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் 4 ரதவீதிகளிலும் உலா வந்தனர். மேலும் கோவில் கலையரங்கில் பாடகி மகதியின் இசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன.

4-வது நாள் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மற்றும் இரவில் சுவாமி, அம்பாள் வீதிஉலா நடைபெறுகிறது. கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு, பரதநாட்டியம் மற்றும் தோல் பாவை கூத்து ஆகியவை நடைபெறுகின்றன. வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News